நரகாசுரனை அழித்து விட்டதால் மட்டும் நம் வாழ்வில் ஒளி பிறந்துவிட்டதா?
நமது மனதில், எண்ணங்களில், சிந்தனைகளில், பேச்சுக்களில், பார்வைகளில்,
செயல்களில் அசுரன் இன்னமும் குடி கொண்டிருக்கிறானே.வறுமையிலும்,
பசியிலும், பட்டினியிலும், சுகவீனங்களிலும், துக்கங்களிலும்,
துயரத்திலும் நம்மை வாட்டி வதக்கிக் கொண்டிருக்கிறானே...
கோபம், பொறாமை, அழுக்கு, வக்கிர புத்திகள், ஏமாற்றுவது, புறங்க்கூருவது,
சுயநலம், திருட்டு இன்னும் பல வடிவங்கள், நம்மில் ஒழிந்து கொண்டு
குடியிருக்கும் அசுரனின் செயல்பாடுகள் அல்லவா? ஒரு அறையின் இருட்டை போக்க
எப்படி வெளிச்சம் தேவை படுகிறதோ, அது போல், நம்மில் இருக்கும் அசுரனை
ஒழிக்க, அழிக்க, 'ஞான ஒளி', 'அறிவு ஒளி', 'உண்மை ஒளி' என்ற வெளிச்சம்
தேவை படுகிறது.
அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
--
V.GOPALAKRISHNAN
gopalakrishnanvelu.blogspot.com
gopalakrishanvelu.blogspot.com
No comments:
Post a Comment